ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளும் கட்சியின் தீர்மானத்தை மீறி அரசாங்கத்தில் இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று(20) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து அமைச்சரவை அமைச்சுக்களை பொறுப்பேற்றனர்.

ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, அமைச்சரவை பதவிகளை ஏற்கும் தீர்மானம் தமது அரசியல் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் எனினும் அவர்கள் நாட்டின் வெற்றிக்காக பந்தயம் கட்டுவதாகவும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version