இலங்கையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் வங்கியின் கூற்றுப்படி அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 311.01 ரூபா மற்றும் 329.68 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 309.29 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை விற்பனை விலையானது மாறாமல் 327.50 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் முறையே 313 ரூபா மற்றும் 327 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

Share.
Exit mobile version