வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் எதிர்காலத்தில் விசேட பொதி ஒன்றை அறிமுகப்படுத்த ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

இதன்படி, வௌிநாட்டு முதலீட்டுக்களுக்கான அரசாங்க நிதி மற்றும் ஏற்பாடுகள் உள்ளிட்ட சலுகைகளின் பொதி ஒன்று விரைவில் முன்வைக்கப்படவுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு போதிய ஊக்குவிப்புக்கள் இல்லாதது பாரிய பிரச்சினை எனவும், இவ்வளவு இயற்கை வளங்கள் இருந்தும் அது முறையாக மேற்கொள்ளப்படாமை தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Share.
Exit mobile version