கடந்த வாரத்துடன் (28) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்றைய தினம் சற்று உயர்வடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று அறிக்கையின் படி,

கடந்த வாரம் 313.92 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி இன்று 313.73 ரூபாவாக குறைந்துள்ளது.

அதேநேரம், 328.75 ரூபாவாக காணப்பட்ட விற்பனை பெறுமதியானது 328.41 ரூபாவாகவும் குறைந்துள்ளது.

Share.
Exit mobile version