கடந்த வாரம் மாத்திரம் 1900 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக* தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த சிகாதார பிரிவுகளும் இந்த அதிக அபாய வலயங்களில் உள்ளடங்குவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதற்கு மேலதிகமாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருநாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள சில சுகாதார மற்றும் மருத்துவ பிரிவுகளும் டெங்கு அபாய வலயங்களுக்குள் உள்ளடங்கியுள்ளன.

இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர், கம்பஹா மாவட்டத்திலும்டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version