உப்பை உட்கொள்வதால் ஏற்படும் உடல் நலப் பாதிப்பு குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
உணவில் அதிகப்படியான உப்பு எடுத்துக் கொள்ளல் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் WHO எச்சரித்துள்ளது.
ஒரு டுவிட்டர் காணொளியில் இதனை கூறியுள்ள WHO, ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவான உப்பினை உட்கொள்ளலுக்காக எடுத்துக் கொள்ளுமாறும் பொது மக்களை வலியுறுத்தியுள்ளது.
முதியவர்கள் ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டியை விட குறைந்தளவு உப்பை உட்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் இதயத்தை பாதுகாத்துக் கொள்ள உப்பு உட்கொள்ளலில் கவனம் செலுத்துமாறு WHO கேட்டுக் கொண்டுள்ளது.