புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் உட்பட எந்தவொரு நபருக்கும் அதற்கான வாய்ப்பு இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

மே மாதம் 30 ஆம் திகதி வரை அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தமது முன்மொழிவுகளை நீதியமைச்சகத்திடம் சமர்ப்பிக்க முடியும்.

அந்த முன்மொழிவுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அதற்கு முன்னர் பல சுற்று கலந்துரையாடல்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் அண்மையில் அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன் சில தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதன்படி, குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்தார்.

Share.
Exit mobile version