எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வேன் கட்டணத்தையும் குறைக்கவுள்ளதாக அகில இலங்கை பாடசாலை வாகன சாரதிகள் சங்கத்தின் (AISVOA) தலைவர் மல்சிறி டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த கால மற்றும் நேற்றைய எரிபொருள் விலை குறைப்பினை கருத்திற் கொண்டு, மாதாந்த பாடசாலை வேன் கட்டணத்தை திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எவ்வாறாயினும், கட்டண தொகையை மீளாய்வு செய்வது குறித்த தீர்மானம் குழு கூட்டத்தின் பின்னர் நாளை எடுக்கப்படும்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பெற்றோர்கள் சோர்ந்து போயுள்ளதால், அண்மைய எரிபொருள் விலைக் குறைப்பின் பலனை நாங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version