கடந்த மூன்று மாதங்களில் நாட்டின் தேயிலை உற்பத்தி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில் 5 மில்லியன் கிலோ தேயிலை குறைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின் அளவு 63 மில்லியன் கிலோவாகவும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 58 மில்லியன் கிலோவாகவும் உள்ளது.

2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 62 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் 54 மில்லியன் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை தேயிலை சபை மேலும் தெரிவித்துள்ளது.

எனினும் தேயிலை ஏற்றுமதி வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு கிலோ தேயிலையின் விலை அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணம் என இலங்கை தேயிலை சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Share.
Exit mobile version