கடந்த மார்ச் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்தும் வலுவடைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறையின் வருவாய்கள் என்பன கடந்த மார்ச் மாதத்தில், குறிப்பிடத்தக்க மேம்பாட்டினைப் பதிவு செய்திருந்தன.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி மற்றும் மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட கொள்கைத் தளர்வினால் ஏற்பட்ட மேம்பாடுகளினால் கடந்த மார்ச் மாதத்தில், செலாவணி வீதம் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்ததுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Share.
Exit mobile version