அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர்களிடையே இணக்கம் காணப்படாததன் காரணமாக, தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட 3 சுயேச்சை ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களை நியமிப்பது தாமதமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழு என்பன உறுப்பினர்களை நியமிக்க முடியாதமல் இழுபறி நிலையில் காணப்படும் ஏனைய இரண்டு ஆணைக்குழுக்களாகும்.

21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு புதிய அரசியலமைப்புச் பேரவை நியமிக்கப்பட்டதன் பின்னர் அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களும் கலைக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவிருந்தனர்.

ஜனாதிபதி, பிரதமரின் பிரதிநிதிகள் மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் அடங்கிய அரசியலமைப்பு பேரவைக்கு புதிய உறுப்பினர்களின் நியமனம் தொடர்பான பொறுப்பு கையளிக்கப்பட்டது.

எனினும், இந்த பேரவையில் உள்ள பல உறுப்பினர்களின் இழுபறி காரணமாக சுயாதீன நிறுவனங்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் தாமதமாகி வருவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம் அந்த நிறுவனங்கள் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுகின்றன.

Share.
Exit mobile version