எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலுக்கு எதிரான வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்காக 25 மில்லியன் அமெரிக்க டொலரை இலஞ்சமாக பெற்றுக்கொண்டமை தொடர்பில் விசேட பாராளுமன்ற குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற குழுவொன்றை நியமிப்பது முக்கியமானது என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான குழுவொன்றை நியமிப்பதன் மூலம் சம்பவத்தின் மூலகாரணங்கள் அனைத்தும் வெளிவரும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் இந்த சம்பவம் தொடர்பில் விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு சபாநாயகரிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.