2015ஆம் ஆண்டு முதல் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது.

ஆணைக்குழுவின் அதிகாரிகள் சமீபத்தில் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டபோது இது தெரியவந்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வருடாந்த அறிக்கையின் பின்னர் கோப் குழுவானது வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த போதிலும், இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார விசனம் தெரிவித்துள்ளார்.

காணி ஒதுக்கீட்டில் முறையான வரிசையை ஆணைக்குழு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கடந்த கூட்டத்தில் குழு பரிந்துரைத்த போதிலும், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது இங்கு அவதானிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version