2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 12.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

குறுக்கு நாணய மாற்று விகித நகர்வுகளின் அடிப்படையில், இந்த காலகட்டத்தில் ஜப்பானிய யெனுக்கு நிகராக இலங்கை ரூபாய் 14.2 சதவீதம் உயர்ந்துள்ளது.

பவுண்ட் ஸ்டெர்லிங்கிற்கு நிகராக 8.8 சதவீதமும், யூரோவுக்கு நிகராக 9.1 சதவீதமும், இந்திய ரூபாயிக்கு நிகராக 11.4 சதவீதமும் இலங்கை ரூபாய் அதிகரித்தது.

Share.
Exit mobile version