இம்மாத ஆரம்பத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டது.

அதன்படி 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு 1005 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 3738 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

05 கிலோ கிராம் சமையல் எரிவாயு 402 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 1,502 ரூபா என நிர்ணயிக்கப்பட்டது.

2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு 183 ரூபாவினால் குறைக்கப்பட்டு தற்போது அது 700 ரூபாயாக நிலவுகிறது.

இம்மாதம் 5ஆம் திகதி மீண்டும் எரிவாயுவுக்கான விலைசூத்திரம் அமுலாக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன்போது உலக சந்தையில் நிலவுகின்ற விலை நிலவரங்கள் கருத்திற் கொள்ளப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்த மேலதிக விபரங்களும், ஏனைய முக்கியமான பல செய்திகளும் அடங்கிய காணொளி கீழே தரப்பட்டுள்ளது.

இப்போதும் 13 லட்சம் கொடுப்பனவு பெறும் கோட்டாபய ராஜபக்ச | எரிபொருள், எரிவாயு விலைகள் மாறும்.

Share.
Exit mobile version