வெசாக் கூடுகள் உள்ளிட்ட வெசாக் அலங்காரங்களின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக வெசாக் அலங்காரப் பொருட்களின் விற்பனை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக வெசாக் அலங்கார வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு 75 ரூபாய் முதல் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கடதாசி சுற்றாத சிறிய அளவிலான வெசாக் கூடு இந்த ஆண்டு 180 ரூபாவாகவும் கடதாசி சுற்றப்பட்ட வெசாக் கூடு 300 ரூபாயை விட அதிகமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 5 முதல் 10 ரூபாய் வரை விற்கப்பட்ட மெழுகுவர்த்தி 25 ரூபாவாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெசாக் அலங்காரங்கள் மற்றும் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை கடந்த வருடங்களை விட இந்த வருடம் அதிகரித்துள்ளதாகவும், மூலப்பொருட்களின் பற்றாக்குறை பிரதானமாக அவற்றின் விலையை பாதித்துள்ளதாகவும் வெசாக் அலங்கார சந்தைப்படுத்தல் வர்த்தகர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

Share.
Exit mobile version