எதிர்வரும் வெசாக் பண்டிகையினை கருத்திற் கொண்டு மேலதிகமாக ஒரு நாளுக்கு மதுபான சாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தினால் பாரிய வருமான இழப்பு ஏற்படும் என காலல் திணைக்களம் கூறியுள்ளது.

மே 5 மற்றும் 6 ஆகிய வழக்கமான இரு வெசாக் விடுமுறை நாட்களுக்கு மேலதிகமாக மே 4 ஆம் திகதியும் மதுபான சாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால் குறித்த தினத்தில் 337 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்படும் என திணைக்களம் கூறியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் முக்கிய வருவாய் ஈட்டும் துறைகளுள் ஒன்றாக கலால் திணைக்களம் உள்ளது. இதனால் ஆண்டுக்கு 117 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கிறது.

ஆண்டுக்கு 18 வழக்கமான விடுமுறை நாட்களில் மதுபான சலைகளை மூடுவது ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில் மேலதிகமாக ஒருநாள் மதுபான சாலைகள் மூடப்படுவது கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.

Share.
Exit mobile version