எதிர்வரும் மே 2 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை புனித வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் இந்த பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் பல்வேறு சமய மற்றும் சமூக நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

இம்முறை அரச வெசாக் விழா சிலாபம் கெதெல்லேவ ஸ்ரீ ரத்தனசிறி பிரிவேனா விஹாரையில் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோரின் பங்குபற்றுதலுடன் முப்பெரும் பீடாதிபதிகளின் தலைமையில் அரச வெசாக் விழா நடைபெறவுள்ளது.

Share.
Exit mobile version