நாட்டில் கொவிட்-19 பரவலானது அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் கொவிட்-19 தொற்றினால் பலர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அண்டை நாடான இந்தியாவில் அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் கொரோனா பரவல் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் எழுந்துள்ளது.
எனவே கொவிட்-19 தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது மக்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
இல்லையெனில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து சமூகத்தை ஆபத்தில் ஆழ்த்தலாம் என்றும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.