மே மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் தென்மேற்கு பருவமழை காலம் ஆரம்பிப்பதனால், அதன் பின்னர் இந் நாட்களில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை படிப்படியாக குறைந்துவிடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பூகோள காலநிலை மாற்றங்களினால் இந்த நிலைமைகள் ஏற்படுகின்றன.
தற்போது வளிமண்டலத்தில் நீராவியின் அளவு அதிகமாக இருப்பதால் வளிமண்டலத்தில் வெப்ப வெளியீடு தடைப்பட்டுள்ளது.
இதனால் வெப்பமான சூழ்நிலை நிலவுகிறது.
மேலும், மழை பொழிவதைத் தொடர்ந்து, நீராவி படிப்படியாக குறைவடையும்.
அதனூடாக வெப்ப நிலையும் படிப்படியாக குறைந்துவிடும்.

இந்நிலைமை குறைவடையும் வரை இளநிற ஆடைகளை அணியுமாறும், கடினமான வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்றும், அதிகளவு தண்ணீர் அருந்துமாறும் அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலான காலப்பகுதியில், குழந்தைகள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் திறந்த வெளியில் சுற்றித் திரிவதை தவிர்க்க வேண்டும் என்றும், இனிப்பு பானங்களை அருந்தக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதால், எதிர்பாலத்தில், இந்த அதிக வெப்ப நிலை குறைந்துவிடும் எனறும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version