இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் புத்தக வெளியீட்டின் ஊடாக முன்வைத்த குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்க் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த தூதுவர், “புனை கதையாகக் கருதப்பட வேண்டிய புத்தகம்” மூலம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொய்யைப் பரப்பியதற்காக வருந்துவதாகக் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா 75 ஆண்டுகால வரலாற்றில் இலங்கையின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் செழுமைக்காக மேற்கொண்ட தியாகங்களைச் தொடர்ந்தும் பராமரித்துச் செல்லும் என அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version