ஹங்கேரிய கடனுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையில் மேம்பாலத் திட்டங்களை விரைவாக முடிப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஹங்கேரிய அரசாங்க அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கொஹுவளை மற்றும் கோதம்பே மேம்பாலங்களின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இதற்காக ஹங்கேரி அரசு 52 மில்லியன் யூரோக்களை கடனாக வழங்கியுள்ளது.

Share.
Exit mobile version