விநியோகஸ்தர்களுக்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (26) பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

இந்த ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான உணவு வழங்குனர்களுக்கு உலக வங்கி நிதி 87 கோடி ரூபாயை செலுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிலையியற் கட்டளைகள் 27(2)இன் கீழ் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share.
Exit mobile version