2019 ஆம் ஆண்டு 1200 பேருக்கு 2 ஆம் மொழி ஆசிரியர் நியமனம் செய்தவற்கான தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தியதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் 1200 பேருக்கு 2 ஆம் மொழி ஆசிரியைகளை நியமனம் செய்தவர்க்கான தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கான பயிற்சிக்கான கடிதங்கள் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டு, அரச நிறுவனம் ஒன்றினூடாக அவர்களுக்கு பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அதன் பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் இந்நியமனம் கைவிடப்பட்டது.

இது தொடர்பாக நேற்றுமுன்தினம் நடந்த அரச பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெளிவாக எடுத்துக் கூறினேன்.
இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை வழங்கினார்.
இவ்விடயத்தில் சாதகமான முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை தற்போது ஏற்பட்டிருக்கின்றது என்றார்.

Share.
Exit mobile version