7 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தில் இருந்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதிநாயக்க மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து சிரேஷ்ட குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.பி மெதவத்த சிரேஷ்ட பிரதி உதவி சேவைகள் மற்றும் வடமேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.கே.ஜெயலத் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து வடமேற்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் ஆர்.எல் கொடித்துவக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மருத்துவ சேவைகள் நலன் மற்றும் களப்படையில் இருந்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் உதவி சேவைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திரு.அஜித் ரோஹன கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குற்றவியல் மற்றும் போக்குவரத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.கே. சில்வா சிரேஷ்ட பிரதி மருத்துவ சேவைகள் நலன்புரி மற்றும் களப் படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Share.
Exit mobile version