நான்காவது முறையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புள்ள வெளிநாட்டு வீரர்கள் குறித்த அறிவிப்பை எல்பிஎல் அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வெளிநாட்டு வீரர்கள் கீழே:-
வெஸ்ட் இண்டீஸ் –
டுவேன் பிராவோ, கைரோன் பொல்லார்ட், ஜான்சன் சார்ல்ஸ் மற்றும் ஏஷ்லி நர்ஸ்
நியூசிலாந்து – மிட்செல் சென்டர், இஷ் சோதி, டிம் சிஃப்ட், டெரில் மிட்செல் மற்றும் டக் பிரேஸ்வெல்
அயர்லாந்து –
போல் ஸ்டிர்லிங்
நமீபியா –
ஜெரார்ட் எரஸ்மஸ்
பங்களாதேஷ் –
ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் அஃபிஃப் ஹொசைன்
பாகிஸ்தான் –
முகமது நவாஸ், நசீம் ஷா மற்றும் வஹாப் ரியாஸ்
தென்னாப்பிரிக்கா –
லுங்கி என்கிடி, இம்ரான் தாஹிர் மற்றும் தப்ரீஸ் ஷம்சி
ஆஸ்திரேலியா –
ஷோன் மார்ஷ், மேத்யூ வேட், டார்சி ஷார்ட் மற்றும் உஸ்மான் கவாஜாஎல்பிஎல் போட்டியில் 5 அணிகள் இணைய உள்ளன.
காலி, தம்புள்ளை, யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் கண்டி ஆகிய அணிகளின் பங்குபற்றுதலுடன், கொழும்பு மற்றும் கண்டியை அண்மித்த பகுதிகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.