பலாங்கொடை, கொடகும்புர பிரதேசத்தில் நேற்று (24) மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் குறித்த பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரெனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் தனது வீட்டில் இருந்தபோது இவ்வாறு மின்னல் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளார்.
இதனையடுத்து, அவர் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில்,
அங்கு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.