வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து மீண்டும் தொழில் தொடங்கும் நபர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று (25) விசேட உரையொன்றை ஆற்றிய போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்றைய தினம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதுடன், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு 2 மில்லியன் வரையிலான குறைந்த வட்டியில் கடனைப் பெற்றுக் கொள்வதற்கான பிரேரணை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை அந்த வருடத்தில் 30,915 பெண்கள் வெளிநாடு சென்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்லும் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Share.
Exit mobile version