அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக களுத்துறையின் சில பகுதிகளில் இன்று(25) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, வாத்துவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, மொரன்துடுவ, போம்புவல, பிளமினாவத்தை, தர்கா நகர், பெந்தோட்டை, அளுத்கம, களுவாமோதர மற்றும் பேருவளை ஆகிய பகுதிகளில் இன்று(25) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.