அஸ்வசுமா நலத்திட்ட உதவித் திட்டம் 01 ஜூலை 2023 முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் இதற்கான விசேட வர்த்தமானி கடந்த வெள்ளிக்கிழமை (21) வெளியிடப்பட்டது.

அதன்படி, நலத்திட்ட உதவித் திட்டத்திற்கு 4 சமூகப் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டு, அந்த பிரிவுகள் இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, ஏழை மற்றும் மிகவும் ஏழ்மை என பெயரிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இடைநிலைப் பிரிவில் உள்ள குடும்ப அலகுக்கு, 31 டிசம்பர் 2023 வரை மாதந்தோறும் ரூ. 2,500 உதவித்தொகையும் பாதிக்கப்படக்கூடிய என அடையாளம் காணப்பட்டுள்ள குடும்ப அலகுக்கு 2025 மார்ச் வரை மாதாந்தம் ரூ. 5,000 உம் வழங்கப்படும்.

மேலும் ஜூலை 1, 2023 முதல் 3 ஆண்டுகளுக்கு, ஏழைப் பிரிவின் கீழ் உள்ள ஒரு குடும்ப அலகுக்கு ரூ. 8,500 மற்றும் மிகவும் ஏழ்மையான பிரிவின் கீழ் வரும் குடும்ப அலகுக்கு ரூ. 15,000 உதவித் தொகையும் வழங்கப்படும் என வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version