நாவுல மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து நேற்றிரவு இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீர்த்தேக்கம் மற்றும் மின்நிலையத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிரலகொல்ல இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் எல்பிட்டிய பிரசேத்தைச் சேர்ந்த 39 வயதான ஒருவரென தெரிவந்துள்ளது.

நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 இராணுவ சிப்பாய்களில் ஒருவர் காணாமல் போயிருந்தமையினால் ஏனையோர் தேடுதல் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

அதன்போது, நீர்த்தேக்கத்தின் அணைக்கு கீழே, 300 மீற்றர் ஆழத்தில் நீர் பாயும் பாலத்தின் அடியிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நாவுல பொலிஸார் மேலதி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Exit mobile version