கராச்சி மிருகக்காட்சிசாலையில் நூர் ஜெஹான் என்ற ஆப்பிரிக்க யானை இறந்ததைத் தொடர்ந்து, நல்லெண்ணத்தின் அடையாளமாக பாகிஸ்தானுக்கு இரண்டு யானைகளை வழங்குவதற்கு இலங்கை உறுதியளித்துள்ளதாக இரண்டு பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திடம் இரண்டு யானைகளுக்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, இலங்கை இரண்டு யானைகளை பாகிஸ்தானுக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது – ஒன்று கராச்சி மிருகக்காட்சிசாலைக்கும் மற்றைய யானை லாகூருக்கும் அனுப்படவுள்ளன.

Share.
Exit mobile version