குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தின் வழக்குப் சேமிப்பில் இருந்து 54 எரிவாயு சிலிண்டர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சிலிண்டர்களின் பெறுமதி 4,32,000 ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.
நீதவான் நீதிமன்றப் பதிவாளரால் குளியாப்பிட்டிய பொலிஸ் நியைத்தில் நேற்று (21) செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த கேஸ் சிலிண்டர்கள் திருடப்பட்ட சரியான திகதி இன்னும் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.