400 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் நிங்கலூ ஹைபிரிட் சூரிய கிரகணம் இன்றைய தினம் தென்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் அரிய சூரிய கிரகணத்தை அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்துள்ளனர்.
அவுஸ்திரேலியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இந்த கிரகணம் தெளிவாக தெரிந்துள்ள போதும் இலங்கையில் தென்படவில்லை.
சூரிய குடும்பத்தில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது.
முழு கிரகணம், பகுதி கிரகணம், வளைய கிரகணம், வளைய மற்றும் முழு கிரகணம் இணைந்த கலப்பின கிரகணம் என நான்கு வகையான சூரிய கிரகணங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அதன்படி, 400 வருடங்களுக்குப் பிறகு மிகவும் அரிதான கலப்பின சூரியகிரகணம் இன்று நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.