வெடிபொருட்கள் தொடர்பான வணிகங்களை நடத்துவதற்கான உரிமக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, கல் வெடி மருந்து உற்பத்திக்கு மட்டும் 2,000 ரூபாவாக இருந்த உரிமக் கட்டணம் 4,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சேவை நூல் தயாரிப்புக்கான உரிமக் கட்டணம் 4,000 ரூபாவிலிருந்து 7,000 ரூபாவாகவும், கல் ​வெடி மருந்து மற்றும் பாதுகாப்பு சேவை நூல் தயாரிப்புக்கான உரிமக் கட்டணம் 7,000 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வெடி பொருட்களை இறக்குமதி செய்பவர்களின் வணிகத்திற்கான உரிமக் கட்டணம் மற்றும் வெடிபொருள் வழங்குனர்களின் வணிகத்திற்கான உரிமக் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்களை வைத்திருப்பதற்கும் பயன்படுத்துவதற்குமான அனுமதிக் கட்டணத்தை 2000 ரூபாவாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share.
Exit mobile version