இந்த நாட்டில் மலேரியா பரவும் அபாயம் இருப்பதாக மலேரியா நோய்க் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.

மலேரியா பரவும் நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களிடம் இருந்து மலேரியா பரவும் அபாயம் உள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் சம்பா அளுத்வீர தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வெளிநாட்டு பணியாளர்கள், இரத்தினக்கல் வியாபாரிகள் மற்றும் அமைதி காக்கும் படையினர் மற்றும் வௌிநாடு செல்லும் மக்கள் ஊடாக மலேரியா நாட்டிற்குள் வரக்கூடும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலப்பகுதியில், ஆசியாவில் சுமார் 600,000 மலேரியா நோயாளிகள் இறந்துள்ள நிலையில் கடந்த ஆண்டில் இலங்கையில் 37 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் என்று மலேரியா நோய்க் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version