க.பொ.த உயர் தர விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை தாமதப்படுத்தி, மாணவர்களின் விரக்தியை பயன்படுத்தி தீவிரவாத அரசியல் சித்தாந்தங்களை ஊக்குவிக்க சில அரசியல் குழுக்கள் முயற்சிப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

புலனாய்வு அறிக்கையொன்றினூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உயர் தர விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை நிறைவுசெய்ய 19,000 ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில், உயர்தர நடைமுறைப் பரீட்சைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விடைத்தாள்களை மதிப்பீட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆசிரியர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் (FUTA) விரைவில் இந்த வேலைத்திட்டத்தில் ஈடுபடும் என்று நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

Share.
Exit mobile version