பல நாடுகளில் வேலை வாய்ப்புகள் இலங்கை தொழிலாளர்களுக்கு பாரிய அளவில் திறக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் தாதியர் வேலை வாய்ப்புகள், இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஹோட்டல் துறையில் வேலை வாய்ப்புகள், ஐரோப்பிய நாடுகளில் தாதியர் வேலை வாய்ப்புகள், சவுதி அரேபியாவில் கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்புகள் இலங்கை தொழிலாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இன்று (18) காலை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தொழில் பயிற்சி அதிகார சபைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

இந்த தொழில் தேவையை பூர்த்தி செய்ய பயிற்சி பெற்ற தொழிலாளர்களை வழங்க முடியவில்லை என்றும் அமைச்சர் இதன்போது கவலை வெளியிட்டார்.

இந்த ஒப்பந்தம் மூலம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையானது வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்குத் தேவையான திறன்களைக் கொண்ட நிபுணர்களைப் பயிற்றுவித்து, அவர்களுக்கு தேசிய தொழில்முறை தகைமை மற்றும் பிற தொழில்முறை சான்றிதழ்களை வழங்கும் என்றும் அமைச்சர் இதன்போது கூறினார்.

Share.
Exit mobile version