அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 48 மணித்தியாலங்களில் (இன்று காலை 6 மணி வரை) 7 கோடியே 55 இலட்சத்து 8100 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ் வீரகோன் தெரிவித்தார்.
இதன் போது இரண்டு இலட்சத்து 56, 225 வாகனங்கள் பயணித்ததாக அவர் கூறினார்.
சிங்கள, தமிழ் புத்தாண்டுக்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் தெற்கு அதிவேக வீதி, கொழும்பு வெளிவட்ட வீதி, கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக வீதிகளை கடந்த 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் வருமானம் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.