இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் முதல் வாரத்தில் 65,000 மெட்ரிக் தொன் யூரியாவை இறக்குமதி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சேதனைப் பசளைக்கு மேலதிகமாக நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்கப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனைத்தவிர, 80,000 மெட்ரிக் தொன் சேதனைப் பசளையும் செய்கை நிலங்களுக்காக விநியோகிக்கப்படவுள்ளது.

4 மில்லியன் லீட்டர் உயிரியல் திரவ உரம் மற்றும் 3 மில்லியன் லீட்டர் திரவ உரம் என்பன விவசாயிகளுக்கு விநியோகிக்கபட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version