எதிர்வரும் ஜூன் மாதம் முதல் செலவினங்களை 50 சதவீதமாக குறைக்க பிரதமர் அலுவலகம் தீர்மானித்துள்ளது.

இதன்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் அலுவலகத்தின் சேவைக்காக வேறு அரச நிறுவனங்களில் இணைக்கப்பட்டிருந்த 26 பணியாளர்கள் அவர்களது நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இத்துடன் , ஏனைய அரச நிறுவனங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 16 வாகனங்களும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் பிரதமர் அலுவலகத்தின் கடமைகளை நிறைவேற்றுவதற்கும், செலவுகளைக் குறைப்பதற்கும் மிகக்குறைந்தளவிலான பணியாளர்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்களை வழங்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பணிப்புரை விடுத்துள்ளார்.

Share.
Exit mobile version