நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது மட்டுப்படுத்தப்பட்டால் அதற்கேற்றவாறு சம்பளமும் குறைக்கப்படுமென பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரத்னசிறி சிங்கள இணையத்தளம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

தற்போது அரச உத்தியோகத்தர்களை கடமைக்கு அழைப்பதை கட்டுப்படுத்துமாறு முன்மொழிபவர்கள் அவ்வாறான சம்பளக் குறைப்புக்கு இணங்கினால் சுற்றறிக்கை ஒன்றை வெளியிடத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட செலவில் வேலைக்கு வருபவர்களுக்கும், வீட்டில் இருந்தே செலவு இல்லாமல் வேலை செய்பவர்களுக்கும் ஒரே மாதிரியான சம்பளம் வழங்குவது அநியாயம் என்றும் செயலாளர் கூறிப்பிட்டார்.

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் மற்றும் அருகில் உள்ள சேவை நிலையமொன்றிற்கு கடமைக்குச் செல்வதற்கு அனுமதிப்பதற்கான அதிகாரம் என்பவற்றை நிறுவனத் தலைவருக்கு வழங்குமாறு அத்தியவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள கோரிக்கைக்கு பதிலாகவே செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version