போனி கபூர் கொடுத்த அப்டேட்

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது AK 61 திரைப்படம் உருவாகி வருகிறது.

நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களுக்கு பிறகு மீண்டும் அஜித் – வினோத் – போனி கபூர் கூட்டணி இப்படத்திற்காக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்த வரும் நிலையில் மஞ்சு வாரியர், வீரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் AK 61 படம் குறித்து பேசியுள்ளார். அதன்படி அவர் AK 61 படத்தின் 35 நாள் ஷூடிட்ங் முடிந்துள்ளதாகவும், தீபாவளி அன்று படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் பேசியுள்ளார்.

(Cineulagam)

Share.
Exit mobile version