சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் சென்ற மக்கள் கொழும்பு திரும்புவதற்காக இன்றும்(17) விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மக்களுக்கு போதிய போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதன் பணிப்பாளர் நாயகம் திரு.நிலான் மிராண்டா தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று சுமார் 30 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் சாரதிகள் சேவைக்கு சமூகமளிக்காமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று(17) அலுவலக ரயில் சேவைகள் உள்ளிட்ட தூர பயண சேவைகளை முன்னெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version