ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா புகை குண்டுகளால் தாக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வகாயாமா மாகாணத்தில் உள்ள சைகாசாகி மீன்பிடி துறைமுகத்தில் இன்று (15) இடம்பெற்ற தாக்குதலில் பிரதமருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

துறைமுகத்தில் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு உரையாற்றத் தயாராகிக் கொண்டிருந்த போதே இந்த வெடிகுண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் இருபது முதல் முப்பத்தேழு வயதுக்கு இடைப்பட்ட நபர் ஒருவரை ஜப்பானிய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share.
Exit mobile version