மிரிஹான-பெத்தகான பிரதேசத்தில் இருவரை தாக்கி ஐந்து இலட்சம் ரூபாவை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் நுகேகொட பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மற்றுமொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பண கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் நுகேகொடை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட வேண்டிய பொலிஸ் சார்ஜன்ட் தலைமறைவாகி உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

முதலில் ஒருவரை கைது செய்து விசாரிக்கும் போது கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் போலீஸ் சார்ஜன்ட் யார் என்பது தொடர்பில் தகவல்கள் வெளியானதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

Share.
Exit mobile version