இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான விசேட கலந்துரையாடலை ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆரம்பித்துள்ளன.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டங்களில் அந்நாடுகள் பங்குபற்றிய வேளையில் இந்த விசேட செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக ஜப்பான் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரான்ஸ் நிதியமைச்சர் புருனோ லு மைரே ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
இதற்கிடையில், கடனை நிலைநிறுத்துவதற்கான தீர்வை விரைவாக செயல்படுத்த இலங்கைக்கும் அதன் அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.