வெள்ளவத்தை பகுதியில் நேற்று (03) 21 வயதுடைய பெண்ணொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
தெஹிவளையில் இருந்து மரைன் டிரைவ் வழியாக கரையோரப் புகையிரதப் பாதை ஊடாக கொழும்பு – கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலில் குறித்த பெண் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மொரட்டுவையைச் சேர்ந்த 21 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.