வளிமாசடைதல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல மாவட்டங்களின் முக்கிய நகரங்களில் வளிமாசுபாடு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டின் 10 மாவட்டங்களில் நேற்ற வளிமாசு பாடு அதிகரித்து காணப்பட்’டதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன தரவுகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கொழும் நகரில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார்.
அமெரிக்க காற்றுத் தரக் குறியீட்டின் பிரகாரம் கொழும்பு நகரின் காற்றின் தரக் குறியீடு நேற்றைய நாளில் 154 அலகுகளாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
இவை தவிர யாழ்ப்பாணம் நகரின் காற்றின் தரக் குறியீடு 106, புள்ளிகளாகவும் குருநாகல் மற்றும் வவுனியா நகரங்களில் தலா 111, புள்ளிகளாகவும் திருகோணமலையில் 123 புள்ளிகளாகவும் காலியில் 123 புள்ளிகளாகவும் , புத்தளம் நகரில் 117 புள்ளிகளாகவும் , பதுளை நகரில் 134, புள்ளிகளாகவும் முல்லைத்தீவு நகரில் 109, புள்ளிகளாகவும் பதிவு செய்யப்பட்டதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.