டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்கு பல காரணங்கள் இருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதாரச் செயற்பாட்டின் சில செயற்பாடுகளுடன் அதுவரை டொலர்களை வைத்திருந்த தரப்பினர் அந்த டொலர்களை சந்தையில் விடுவித்தமையும் இந்த நிலைமைக்கு மற்றொரு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்த வருட இறுதிக்குள் டொலரின் பெறுமதி மீண்டும் உயரலாம் என ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்திருந்த கணிப்பு தொடர்பில் பேராசிரியர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version